சீட்டா திட்டம்: குனோ தேசிய பூங்காவில் சிவிங்கிப் புலிகள் அறிமுகம்

   Monday, September 26, 2022
  • இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை (சிறுத்தைகள்) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து 'சீட்டா திட்டம்' (Project Cheetah) மற்றும் நாட்டின் வனவிலங்குகள் மற்றும் வாழ்விடங்களை புத்துயிர் மற்றும் பன்முகப்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக 5 பெண், 3 ஆண் சீட்டாக்கள் என 8 சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு (Kuno National Park) சார்ட்டர் சரக்கு விமானம் (போயிங் 747) மூலம் கொண்டுவரப்பட்டது.

  • பிரதமர் நரேந்தி மோடி தனது பிறந்தநாளையொட்டி (செப்டம்பர் 17), குனோ தேசிய பூங்காவில் 3 இந்த சிவிங்கிப் புலிகளை  சிறப்பு அடைப்புக்குள் விடுவித்தார்.

  • இந்நிகழ்வில் பிரதமர் உரையில் இடம்பெற்ற முக்கிய குறிப்புகள்: 1952 இல் இந்தியாவில் இருந்து சிறுத்தை இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விடுவிக்கப்படும் சிறுத்தைகள் நமீபியாவைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இவை கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் சிறுத்தை  அறிமுகமானது, கண்டங்களுக்கு இடையேயான உலகின் முதல் பெரிய மாமிச உண்ணிகள்  இடமாற்றத் திட்டத்தின் கீழ், இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் சிறுத்தைகளின் வரலாற்று மறு அறிமுகம், கடந்த எட்டு ஆண்டுகளில் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நீண்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.  

  • 2014ல் நாட்டின் புவியியல் பரப்பில் 4.90% ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பு தற்போது 5.03% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 2014-ல், பாதுகாக்கப்பட்ட பரப்பு 1,61,081.62 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட  740  இடங்களாக இருந்தது. தற்போது இது  1,71,921 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 981 இடங்களாக அதிகரித்துள்ளது.

  • கடந்த நான்கு ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 16,000 சதுர கி.மீ. காடுகளின் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

  • சமூக ரிசர்வ் காடுகளின்  எண்ணிக்கையிலும் உயர்வு  ஏற்பட்டுள்ளது. 2014ல் வெறும் 43 ஆக இருந்த இவை 2019ல் 100க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.

  • தோராயமாக 75,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட 52 புலிகள் காப்பகங்கள் உள்ளன. உலக அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% இந்தியாவில் உள்ளன. 2022 ஆம் ஆண்டை விட நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 2018 ஆம் ஆண்டிலேயே புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2014 இல் 2,226-லிருந்து 2018 இல் 2,967 ஆக அதிகரித்துள்ளது.

  • 2014ல் ரூ.185 கோடியாக இருந்த  புலிகள் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2022ல் ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது.

  • ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2015 இல் 523-லிருந்து 28.87 சதவிகிதம் (இதுவரை அதிக வளர்ச்சி விகிதங்களில் ஒன்று) அதிகரித்து தற்போது  674 ஆக உயர்ந்துள்ளது.

No comments

Post a Comment