மதுரையில் அமையும் "புதிய டைடல் பார்க்"

   Monday, September 26, 2022
  • செப்டம்பர் 16 அன்று நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மதுரை மண்டல மாநாட்டில், மதுரையில் மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் ரூபாய் 600 கோடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென்தமிழ்நாட்டைச் சார்ந்தவை. அவை: நாகர்கோயில் கோவில் நகைகள்,ஈத்தாமொழி நெட்டை தென்னை, விருபாச்சி மலை வாழைப்பழம், சிறுமலை மலை வாழைப்பழம், பத்தமடைப் பாய்கள், மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டுகள், திருவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப் பூண்டு, மதுரை சுங்கடி, அலைப்பை பச்சை ஏலக்காய், கன்னியாகுமரி கிராம்பு, மலபார் மிளகு, காரைக்குடி கண்டாங்கி சேலை, ஈஸ்ட் இந்தியா லெதர், செட்டிநாடு கோட்டான் என்கின்ற பனை ஓலைக் கூடைகள் என முதல்வர் குறிப்பிட்டார்.

No comments

Post a Comment