தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டம் என்பது என்ன? தகவல் தொகுப்பு

   Wednesday, September 7, 2022

தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டம்

மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் வகை செய்யும் வகையில்
இத்திட்டம் 2022 செப்டம்பர் 15 தேதி மதுரை மாநகரில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் மாநில அரசின் முழுமையான நிதியைக் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல் படுத்தப்படவுள்ளது.

1,545 அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக ரூ.33.56 கோடி ஏற்கெனவே ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5 ஆயிரத்து 941 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாட்டில் 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37 ஆயிரத்து 740 மாணவ, மாணவிகளுக்கும், 23 நக ராட்சிகளில் 163 பள்ளிகளில் 17 ஆயிரத்து 427 மாணவ, மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப் படவுள்ளது.

என்னென்ன உணவுகள்?

அரிசி உப்புமா, ரவா உப்புமா, வழங்கவுள்ளார். சேமியா உப்புமா, ரவா கோதுமை உப்புமா, ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி, வெண் பொங்கல், ரவா பொங்கல் போன்ற உணவு வகைகள் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாறி மாறி வழங்கப்படவுள் ளன. வாரத்தில் குறைந்தது 2 நாள் கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டிதயார் செய்யப்பட்டு வழங்கப்படும்.

நூற்றாண்டு காணும் பள்ளியில் உணவளிக்கும் திட்டம்

சென்னையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே, முன்மொழியப்பட்டு மாநகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்டது. அப் போதைய மாமன்றத்தின் தலைவராக இருந்த சர்.பிட்டிதியாகராயர் தலைமையில் 1920-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Sources:தினமணி 8.9.2022

No comments

Post a Comment