குரு தேக் பகதூர் நினைவு தினம் - நவம்பர் 24 (சிக்கிய குருமார்கள் பற்றிய தொகுப்பு)
- குரு தேக் பகதூர் நினைவு தினம் ஆண்டுதொறும் நவம்பர் 24 அன்று ஷாகீத் திவாஸ் என்ற பெயரை அனுசரிக்கப்படுகிறது. 1675 ஏப்ரல் 24 அன்று, குரு தேக் பகதூர் மத அடக்குமுறையை எதிர்த்ததால் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டார் என்று அறியப்படுகிறது. இவர் ஒன்பதாவது குருவாக அறியப்படுகிறார்.
- சீக்கிய வரலாறு, சீக்கிய குருக்களில் பத்தாம் குருவான குரு கோவிந்த் சிங் இறப்பில் இருந்து தொடங்குகிறது. சீக்கிய குருக்களில் முதல் குரு குரு நானக் ஆவார். இவர் குரு நானக் தேவ் ஜி என அழைக்கப்படுகிறார்.
- 1469 ஆம் ஆண்டு முதல், குரு நானக் தொடங்கி அடுத்த நூற்றாண்டுகளில் தொடர்ந்த குரு பரம்பரை பரப்பியுரைத்த புனித அறிவுரைகள் படிப்படியாக தனிச் சமயமாக உருவானது. இந்தப் பரம்பரையில் வந்த குருக்கள் சீக்கிய குருக்கள் எனப்படுகின்றனர். முதல் குருவான குரு நானக்கை அடுத்தடுத்து பத்தாவது குரு குரு கோவிந்த் சிங் வரை மனிதர்களாக இருந்தனர்; குரு நானக்கின் வழிகாட்டுதலைக் கொண்ட புனித நூலாகிய ஆதி கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் குரு கோவிந்த் சிங்கால் குரு கிரந்த் சாகிப் என உயர்த்தப்பட்டு இறுதியான மற்றும் நிரந்தரமான பதினொன்றாவது குருவாக வழிமொழியப்பட்டது. அது முதல் சீக்கியர்களின் சமயகுருவாக குரு கிரந்த சாகிப் நிலைத்துள்ளது.
சிக்கிய குருமார்கள்
- 1. குரு குருநானக் தேவ்
- 2. குரு அங்கது தேவ்
- 3. குரு அமர் தாஸ்
- 4. குரு ராம் தாஸ்
- 5. குரு அர்ஜன் தேவ்
- 6. குரு அர்கோவிந்த் சிங்
- 7. குரு அர் ராய்
- 8. குரு அர் கிருசன் சிங்
- 9. குரு தேக் பகதூர் சிங்
- 10. குரு கோவிந்த் சிங்
- 11. குரு கிரந்த் சாகிப் (நிலைத்த/ வாழும் குரு)
- குரு கிரந்த் சாகிப் அல்லது ஆதி கிரந்த் என்பது சீக்கியர்களின் புனித நூலாகும். மேலும் சீக்கியர்களுக்கான கடைசி வார்த்தைகளாகும் ஆகும். இது 1430 அங்கங்கள் (பக்கங்கள்) கொண்ட பெரிய நூலாகும். இந்நூலானது 1469 முதல் 1708 ஆம் ஆண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த சீக்கிய குருமார்களால் எழுதித் தொகுக்கப்பட்டதாகும். அது இறைப் பாடல்கள் அல்லது ஷபதுகளின் ஒரு தொகுப்பாகும். அவை கடவுளின் பண்புகளையும் கடவுளின் பெயரை ஏன் தியானிக்க வேண்டும் என்பதையும் விவரிப்பவையாகும். சீக்கிய குருக்களில் பத்தாமவரான ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஜி (1666–1708), அவருக்கு அடுத்த வழிகாட்டியாக ஆதி கிரந்த்தின் புனித உரையை நியமித்துச்சென்றார், இதன் மூலம் மனித குருக்களின் காலம் முடிவடைந்து புனித நூலின் உரை குரு கிரந்த் சாகிப் என நிலைக்கு உயர்த்தப்பட்டது. அதிலிருந்து, அந்த நூலே சீக்கியர்களின் புனித நூலாக இருந்துவருகிறது. மேலும் பத்து சீக்கிய குருக்களின் வாழும் அவதாரமாகவும் அது கருதப்படுகிறது. சீக்கியத்தில் பிரார்த்தனைக்கான மூலம் அல்லது வழிகாட்டியாக விளங்கும் குரு கிரந்த் சாகிப்பின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
- ஆதி கிரந்த் முதலில் ஐந்தாம் சீக்கிய குருவான குரு அர்ஜன் தேவ் (1563–1606) அவர்களால் தொகுக்கப்பட்டது, அது முதல் ஐந்து சீக்கிய குருக்கள் மற்றும் இந்து மற்றும் இஸ்லாமிய மார்க்கத்தவர்கள் உள்ளிட்ட பெரும் ஞானிகளிடமிருந்து தொகுக்கப்பட்டது. சீக்கியர்களின் பத்தாம் குருவின் மறைவுக்குப் பின்னர், பல கையெழுத்துப் பிரதிகள் தயாரிக்கப்பட்டன, அவை பாபா தீப் சிங் அவர்களால் விநியோகிக்கப்பட்டன.
- குர்முகி எழுத்துகளால் எழுதப்பட்டு, பெரும்பாலும் பண்டைய பஞ்சாபி மொழியிலும் ஆங்காங்கே ப்ராஜ், பஞ்சாபி, காடிபோலி (ஹிந்தி), சமஸ்கிருதம், வட்டாரக் கிளைமொழிகள் மற்றும் பெருஷிய மொழி ஆகியவற்றிலும் எழுதப்பட்ட இது பெரும்பாலும் சந்த் பாஷா என்னும் பொதுவான தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது.
சீக்கியர்களின் ஐந்து சின்னங்கள்
- சீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து கே” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள்.
- கேஷ் (வெட்டப்படாத முடி, இதை பொதுவாக சுருட்டி சீக்கிய தலைப்பாகையான, டாஸ்டர் என்பதன் உள்ளே வைக்கப்படும்.)
- கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக தலைப்பாகையின் கீழ் அணியப்படும்.)
- கச்சாஹெரா (இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.)
- கடா (இரும்பாலானா கைவளையம், இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை தலைப்பாகையில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.)
- கிர்ப்பான் (வளைந்த கத்தி).
No comments
Post a Comment