இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு இராணுவபயிற்சி ஆஸ்திரா இந்த் 2022
- இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்கள் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியை 'ஆஸ்திரா இந்த்' (Austra Hind-22) என்ற பெயரில் நடத்தி வருகின்றன. இந்த 2022 ஆம் ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்களத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவின் 2-வது மண்டலத்தின் 13-வது படைப்பிரிவு வீரர்கள், இந்தியா சார்பில் டோக்ரா படைப்பிரிவு வீரர்கள் பங்கேற்கின்றனர் (India-Australia joint military exercise - Austra Hind 2022).
India-Australia joint military exercise - Austra Hind 2022 2023 |
- இரு படைகளின் அனைத்து ஆயுதங்கள் மற்றும் பிரிவுகள் பங்கேற்கும் முதல் கூட்டுப்பயிற்சி இது வாகும், பாலைவனம் சார்ந்த நிலப்பரப்பில் பல்வேறு வகையான பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, நேர்மறையான ராணுவ உறவுகளை உருவாக்குதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை உள்வாங்குதல் மற்றும் ஒன்றாக செயல்படும் திறனை மேம்படுத்துதலே இந்த பயிற்சியின் நோக்கம் ஆகும்.
No comments
Post a Comment