சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு (2023): ஆலோசனைக் கூட்டம்

   Monday, September 26, 2022
  • இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2023-ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. 

  • தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும், பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் 16 அன்று தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.

  • பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களை தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

No comments

Post a Comment