ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு 2022

   Monday, September 26, 2022
  • 22-வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு 2022, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சாமர்கண்ட் நகரில் செப்டம்பர் 16-17 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். 

  • இம்மாநாட்டில் பிரதமர் உரையில் இடம்பெற்ற குறிப்புகள்: இந்திய பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீத வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 

  • இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019 ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டில் நடைபெற்றது.

  • நடப்பாண்டுக்கான தலைமைப் பொறுப்பை உஸ்பெகிஸ்தான் வகித்த நிலையில், 2023-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா செப்டம்பர் 16 அன்று ஏற்றது. 

  • 2017-ஆம் ஆண்டில் SCO கூட்டமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்த இந்தியா, முதல் முறையாக தலைமையேற்றுள்ளது. அடுத்த (2023) ஆண்டுக்கான SCO மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. 

  • SCO: Shangai Cooperation Organisation.

1 comment

  1. Blow molding is a type of plastic forming course of for creating hole plastic merchandise produced from thermoplastic supplies. CNC machining The course of involves heating and inflating a plastic tube generally known as|often identified as} a parison or preform. The parison is placed between two dies that contain the desired form of the product... The injection molding machine consists of the clamping unit, injection unit, and mildew. This machine converts the uncooked plastic pellets into the molded ultimate half. Delamination The molded half can simply disintegrate layer by layer.

    ReplyDelete