சென்னை நாள் 22.8.2022 - முக்கிய குறிப்புகள்

   Monday, August 22, 2022

இந்தியாவில் 4 முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் நுழைவு வாயிலாகவும் உள்ள சென்னை மாநரம் ஆகும்.


383ஆவது சென்னை நாள் 22.8.2022 அன்று கடைபிடிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ஆகஸ்டு 22-ந் தேதி சென்னை தினமாக (MADRAS DAY) கடைப்பிடிக்கப்படுகிறது. பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி ஒப்பந்தம் செய்து கொண்டதன் நினைவாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

1639-ம் ஆண்டு ஆகஸ்டு அன்று, பிரான்சிஸ் டே என்ற ஆங்கிலேயர். இன்றைக்கு தலைமைச் செயலகம் இயங்கிக் கொண்டிருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை பகுதியை விலைக்கு வாங்கினார். அன்றைய தினமே சென்னையின் நாளாக கணக்கிடப்படுகிறது.

சென்னை நகரம் கி.பி. 01 ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியது. 

1702-ம் ஆண்டு முகலாயர்களாலும், 1741-ம் ஆண்டு மராட்டியர்களாலும் தாக்குதலுக்கு உள்ளானது. 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது. மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் சென்றது. 1758-ம் ஆண்டு திரும்பவும் பிரெஞ்சுக்காரர்களின் வசமானது.

1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடையும் வரை ஆங்கிலேயர்கள் வசமே மதராஸ் நகரம் தொடர்ந்து இருந்தது.

1856-ம் ஆண்டு முதல் ரெயில் நிலையமாக ராயபுரம் உதயமானது. 

1895-ம் ஆண்டு டிராம் வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

சென்னை துறைமுகம், கிழக்கிந்திய கம்பெனியால் 1881-ம் ஆண்டு கட்டப்பட்டது. 

மெட்ராஸ் ஸ்டேட்  அழைக்கப்பட்டு வந்த   மெட்ராஸ் மாகாணம், தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் பெற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாள் 1969ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆகும்.
1967 ஜுலை 18 அன்று பேரறிஞர் அண்ணாதுரை அவர்களது தி.மு.க. ஆட்சியின் போது, சட்டப்பேரவையில் தமிழ்நாடு என பெயர் மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான சட்டத் திருத்தம் 1968-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேத் நிறைவேறியது.

மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட சென்னை மாநகரம்,
1996 ஜூலை 17-ல், மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில், ‘மெட்ராஸ்’ அதிகாரபூர்வமாக ‘சென்னை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

No comments

Post a Comment