- இந்தியாவின் தேச தந்தையான காந்தியின் ஆலோசனையை ஏற்று, இந்திய தேசிய கொடியாம் மூவர்ணக் கொடியை முதலில் வடிவமைத்தவர் பிங்கலி வெங்கய்யா ஆவார். அவர் வடிவமைத்ததுதான் இந்தியா மூவர்ண தேசியக் கொடி ஆகும்.
- ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1878-ம் ஆண்டு பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்த விடுதலை போராட்ட வீரர் பிங்கலி வெங்கய்யா ஆவார். இந்தியா தேசிய கோடியை வடிவமைக்கும் பணியை மகாத்மா காந்தி இவரிடம் ஒப்படைத்தார்.
- 1921-இல் தற்போதைய வடிவிலான கொடியை உருவாக்கினார். பிங்கிலி வெங்கய்யா வடிவமைத்த கொடியில், வெண்மை நிறத்தின் நடுவே முதலில் கைராட்டை சின்னம் இருந்தது.
- 1931-இல் அது அசோக சக்கரமாக மாற்றப்பட்டது. இந்த இறுதி வடிவமைப்பைச் செய்தவர் பக்ருதின் தியாப்ஜி ஆவார். இந்த வடிவமைப்புதான் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது. 1947 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று தற்போதைய வடிவில் தேசியக் கோடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த மூவர்ண கொடிதான் தற்போது இந்தியாவின் தேசியக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.
Home » Important Days » தேசியக்கொடியை வடிவமைத்த வெங்கய்யா பிறந்தநாள் - ஆகஸ்ட் 2
தேசியக்கொடியை வடிவமைத்த வெங்கய்யா பிறந்தநாள் - ஆகஸ்ட் 2
TNPSCLINK
Monday, August 1, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment