Digital முறையில் வழங்கப்படும் சான்றிதழ்கள் செல்லும்: UGC

   Friday, January 7, 2022

Digital Certificates, UGC, DigiLocker, NAD portal

  • மாணவா்களின் சான்றிதழ் தொகுப்புகளை ஒருங்கிணைத்து வைக்க தேசிய கல்விசாா் வைப்பகம் (NAD) என்ற அமைப்பு, பல்கலைக்கழக மானியக் குழு தலைமையில் அமைக்கப்பட்டது. 
  • இதில் பள்ளி படிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் இதர உயா்கல்வி படிப்புகளுக்கான சான்றிதழ்கள் பாதுகாக்கப்படுவதோடு, ஆவண காப்பகம் முறையில் ஒருங்கிணைக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
  • மாணவா்களின் விவரங்களை ஒருங்கிணைந்து சேமித்து வைக்க என்ஏடி-யுடன் 'டிஜி லாக்கா்' (DigiLocker) இணைக்கப்பட்டுள்ளது. 
  • அதேபோன்று தற்போது வைப்பகமாக செயல்படும் 'என்டிஎம்எல்', 'சிவிஎல்' ஆகியவையும் என்ஏடி-யுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருக்கும் மாணவா்களின் விவரங்கள் அனைத்தும் என்ஏடி-க்கு மாற்றம் செய்யப்படுகிறது.
  • இதன் மூலம் மாணவா்கள் தங்களது சான்றிதழ்களை எப்போது வேண்டுமானாலும், எந்த இடத்தில் இருந்தும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் மூலம் எண்ம வடிவில் பெற முடியும். 
  • இந்தச் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டவை மற்றும் செல்லத்தக்கவை என தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. 
  • எனவே 'டிஜி லாக்கா்' மூலம் வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி சான்றிதழ்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏற்றுக் கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
  • NAD: National Academic Depository.

1 comment

  1. Lucky Club Casino Site Review and Ratings - Lucky Club Live
    Lucky Club is an online betting platform established in 2021. It has many gambling features such luckyclub as live dealer and online sports  Rating: 5 · ‎Review by LuckyClub.live

    ReplyDelete