தமிழ்நாடு முதல் சட்டப்பேரவைக் கூட்டம் 2022

   Friday, January 7, 2022
  • 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டமானது ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் ஜனவரி 5ஆம் தேதி காலை துவங்கியது.
  • மூன்று நாட்களில் நிறைவு: ரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் கூட்டத்தொடரை இரண்டு நாள்களில் முடித்துக் கொள்ள அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதை அடுத்து ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.
  • சட்டப்பேரவை கேள்வி நேரம் - நேரலை ஒளிபரப்பு: 2022 ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற கேள்வி நேரத்தை தமிழக வரலாற்றில் முதல்முறையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
  • முதல் கேள்வி கேட்ட கருணாநிதி: இந்த வரலாற்று சிறப்புமிக்க நேரலையின் முதல் கேள்வியை பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி கேட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து துவக்கி வைத்தார்.
  • இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார். இந்த நிகழ்வும் நேரலை ஒளிப்பரப்பானது.
  • இந்தக் கூட்டத்தொடரில், டிஎன்பிஎஸ்சி சட்டத் திருத்த மசோதா, கூட்டுறவு சங்க சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments

Post a Comment