தமிழ் வார விழா 2025: தகவல் குறிப்புகள்

   Monday, May 5, 2025
பார­தி­தா­சன்
  • “பாவேந்­தர்” பார­தி­தா­சன் அவர்­கள் தமது இளம் வய­தி­லி­ருந்தே தமிழ்­மொழி மீது தணி­யாத தாக­மும் பற்­றும் கொண்­டி­ருந்­தார். மகா­கவி பார­தி­யார் அவர்­கள் புது­வை­யில் தங்­கி­யி­ருந்­த­போது, அவ­ரு­டன் நெருங்­கிய நட்பு கொண்­டி­ருந்­தார். பார­தி­யா­ரின் கவி­தை­க­ளில் மிகுந்த ஈடு­பாடு கொண்டு அவர் போலவே இனிய கவி­தை­களை எழு­தி­னார். பார­தி­யார் அவர்­க­ளைத் தம் வழி­காட்­டி­யாக ஏற்­றுக்­கொண்டு, பார­தி­தா­சன் எனத் தம் பெய­ரையே மாற்­றிக் கொண்­டார்.
  • பார­தி­தா­சன் அவர்­கள், தமி­ழா­சி­ரி­யர், தமிழ்க் கவி­ஞர், திரைக்­கதை ஆசி­ரி­யர், எழுத்­தா­ளர் என்று பல்­வேறு துறை­க­ளில் தமிழ்­மொ­ழி­யின் இனி­மையை மக்­க­ளி­டம் எடுத்­துச் சென்­ற­வர். பாவேந்­தர் பார­தி­தா­சன் அவர்­கள் 86-க்கும் மேற்­பட்ட நூல்­கள், கதை­கள், கட்­டு­ரை­க­ளைப் படைத்­துள்­ளார். அவ­ரது ‘பிசி­ராந்­தை­யார்’ நாட­கத்­திற்­காக 1970-ஆம் ஆண்டு ‘சாகித்­திய அகா­டமி விருது’, வழங்­கப்­பட்­டது.
  • ‘எங்­கள் வாழ்­வும் எங்­கள் வள­மும், மங்­காத தமி­ழென்று சங்கே முழங்கு’, “தமி­ழுக்­கும் அமு­தென்று பேர், அந்­தத் தமி­ழின்­பத் தமிழ் எங்­கள் உயி­ருக்கு நேர்” போன்ற பல்­வேறு காலத்­தால் அழி­யாத பாடல்­களை படைத்­துள்­ளார். தம் படைப்­பாற்­றல் மூலம் தமி­ழுக்­குப் பல வழி­க­ளில் தொண்­டாற்றி, தமிழ் இனத்­திற்கு எழுச்­சி­யூட்­டிய பாவேந்­தர் பார­தி­ தா­சன் அவர்­கள் 1964-ஆம் ஆண்டு இயற்கை எய்­தி­னார்.
தமிழ் வார விழா: ஏப்ரல் 29 - மே 5, 2025 
  • தமிழ் மொழி­யின், தமிழ் இனத்­தின் சிறப்பை உல­கிற்கு எடுத்­து­ரைத்த பாவேந்­தர் பார­தி­தா­சன் அவர்­களை சிறப்­பிக்­கும் வகை­யில், தமிழ்நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 22.4.2025 அன்று சட்­ட­மன்ற பேர­வை­யில், விதி எண்.110-ன் கீழ்,‘பாவேந்­தர் பார­தி­தா­சன் அவர்­க­ளின் பிறந்த நாளை முன்­னிட்டு ஏப்­ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்­டா­டப்­ப­டும்’என­வும், இவ்­வி­ழா­வில் கவி­ய­ரங்­கங்­கள் மற்­றும் இலக்­கிய கருத்­த­ரங்­கு­கள், பார­தி­தா­சன் இளம் படைப்­பா­ளர் விருது, தமிழ் இலக்­கி­யம் போற்­று­வோம், பள்­ளி­க­ளில் தமிழ் நிகழ்ச்­சி­கள், தமிழ் இசை மற்­றும் கலை நிகழ்ச்­சி­கள் கொண்­டா­டப்­ப­டும் என அறிவித்தார். 
  • தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, கலை பண்பாட்டுத்துறை என பல்வேறு அரசு துறைகள் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. அதன்படி, மாநிலம் முழுவதும் தமிழ் வார நிகழ்ச்­சி­கள் நடைபெற்றன.
  • தமிழ் வார விழாவின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் 5.5.2025 அன்று நடைபெற்றது.
  • இந்நிகழ்வில்  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர் மெர்வின், ஆ.பழநி ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களின் மரபுரிமையினருக்கும், கொ.மா. கோதண்டம் மற்றும் புலவர் இலமா தமிழ்நாவன் ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அவர்களுக்கும் நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்.
  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசால் 4 ஆண்டுகளில், தமிழறிஞர்களின் படைப்புகள் உலக மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களின் அனைத்து நூல்களும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்பட்டது. 
  • மேலும், தமிழறிஞர்கள் நன்னன், சிலம்பொலி செல்லப்பன், விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் இரா. குமரவேலன், மம்மது உள்ளிட்ட 32 அறிஞர்களின் 1,442 நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அதற்கான நூலுரிமைத் தொகையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கப்பட்டுள்ளது.


No comments

Post a Comment