பெர்மியன் ட்ரையாசிக் பேரழிவு” நிகழ்வு என்பது என்ன?
- காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள காண்மோஹ் பகுதியில், 25 கோடி ஆண்டுகள் பழமையான “குரியுல் ரேவைன்” (Guryul Ravines) புதைபடிவ இடத்தை ஆய்வு செய்ய 2021 அக்டோபர் 24 அன்று ஒரு அகழ்வாராய்ச்சி பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
- சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட “பெர்மியன் ட்ரையாசிக் பேரழிவு” நிகழ்வினால் ஏற்பட்ட புதைபடிவ களஞ்சியத்தில் இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
- இந்த புதைபடிவ களஞ்சியம் ஒரு உலக பாரம்பரியமாக கருதப்படுகிறது. இதனை பாதுகாப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- உலகின் மாபெரும் பேரழிவு என ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் ‘பெர்மியன் ட்ரையாசிக் பேரழிவு’ ஏற்பட்டதன் காரணமாக, 95 சதவீதம் கடல்வாழ் உயிரினங்கள் அழிவுற்றன.
- மேற்கண்ட கடல்வாழ் மற்றும் தாவர உயிரினங்களின் பேரழிவு 25 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
Permian–Triassic extinction event
- The Permian–Triassic extinction event, also known as the End-Permian Extinction and colloquially as the Great Dying, formed the boundary between the Permian and Triassic geologic periods, as well as between the Paleozoic and Mesozoic eras, approximately 251.9 million years ago.
No comments
Post a Comment