மும்பை பங்குச் சந்தை முதன்முறையாக 60000 புள்ளிகள் - சாதனை

   9/24/2021

மும்பை பங்குச் சந்தை (SENSEX)

  • மும்பை மற்றும் தேசியப் பங்குச் சந்தைகளில் செப்டம்பர் 24 அன்று தொடங்கிய வர்த்தகம் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை (sensex) கடந்தது புதிய சாதனையை படைத்துள்ளது.
  • தேசிய பங்குச்சந்தை (Nifty) குறியிட்டெண் நிஃப்டியும் 106 புள்ளிகள் அதிகரித்து 17,929 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மும்பை பங்குச் சந்தை (1875): 

  • மும்பை பங்குச் சந்தை (Bombay Stock Exchange) ஆசியாவின் மிகப் பழைய பங்குச் சந்தையாகும். அது இந்தியாவின் மும்பையின் தலால் வீதியில் அமைந்துள்ளது. 
  • இது 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஆசியாவில் 4வது மேலும் உலகின் 8வது பெரிய பங்குச் சந்தை. ஏறத்தாழ 3500 நிறுவனங்களின் பங்குகள் நிரற் படுத்தப்பட்டுள்ளன.

தேசியப் பங்குச்சந்தை (NSE):


  • தேசியப் பங்குச்சந்தை (National Stock Exchange of India) இந்தியாவின் இரு பெரும் பங்குச்சந்தைகளுள் ஒன்றாகும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தச் சந்தை 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 


  • தற்போது 1500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன. மொத்தச் சந்தை மதிப்பீடு (market capitalization) அடிப்படையில், இதுவே ஆசியாவின் இரண்டாவது பங்குச் சந்தை. மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் இரண்டாம் நிலையில் உள்ளது.

No comments