உலக கோப்பை செஸ் 2021 - இந்தியா சார்பில் இனியன் பங்கேற்பு

   6/01/2021

  1.  உலக கோப்பை செஸ் போட்டி (Chess World Cup 2021, Sochi) ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் 2021 ஜூலை 10-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது. 
    Fide Sochi Chess World Cup 2021 

  2. உலக கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரரை தேர்வு செய்ய அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் ஆன்லைன் மூலம் செஸ் போட்டி நடத்தப்பட்டது. 
  3. இதில் 8 கிராண்ட்மாஸ்டர்கள், 7 சர்வதேச மாஸ்டர்கள், 2 பிடே மாஸ்டர் என மொத்தம் 17 வீரர்கள் கலந்து கொண்டனர். 
  4. 16 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஈரோடு நகரை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் 12 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 12½ புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன், உலக கோப்பை செஸ் போட்டிக்கும் தேர்வானார்.
P.Iniyan - Indian Grandmaster


No comments