பன்முனை போர் விமானம் "தேஜஸ் மார்க்-2"

   2/01/2021

  • முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பன்முனை போர் விமானம், தேஜஸ் மார்க்-1ஏ. இதன் அடுத்த தலைமுறையை சேர்ந்த தேஜஸ் மார்க்-2 (Tejas Mark II) போர் விமானத்தை பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வடிவமைத்து வருகிறது. 
  • தேஜஸ் மார்க்-2 போர் விமானம், அடுத்த ஆண்டு 2022 ஆகஸ்டு, செப்டம்பர் மாதவாக்கில் அறிமுகம் செய்யப்படுகிறது. 
  • இதன் அதிவேக சோதனை, 2023-ம் ஆண்டு மேற்கொள்ளப்படும். இந்த விமானம், சக்திவாய்ந்த என்ஜின்கள், பெரிய வடிவமைப்பு, அதிக சுமை தாங்கும் திறன், அடுத்த தலைமுறை மின்னணு ஆயுதங்களை பயன்படுத்தும் திறன் போன்ற சிறப்புகளை கொண்டது.
  • இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம், பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.  ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இதற்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னௌ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.
  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன்.

No comments