சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பொருத்த வரையில் மாதம் 1 டி.எம்.சி. என்ற அளவில் தண்ணீர் தேவைப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான குடிநீர் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இவற்றுடன் வீராணம் ஏரி மற்றும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உள்ள நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.சென்னை மாநகரின் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப 5-வது நீர்த்தேக்கமாக கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் மூலம் தற்போது 475 மில்லியன் கன அடி நீர் சேமிக்கப்பட்டு உ்ள்ளது. அதாவது நீர்த்தேக்கத்தின் கொள்ளளவில் 95 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது (22.1.2021), 11 ஆயிரத்து 70 மில்லியன் கனஅடி (11 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஏரிகளில் 6 டி.எம்.சி. இருப்பு இருந்தது. சராசரியாக கடந்த ஆண்டைவிட தற்போது 2 மடங்கு என்ற அளவில் நீர் சேகரிக்கப்பட்டு இருப்பு உள்ளது. முறையாக ஒரு ஆ்ண்டுக்கு இந்த நீரை குடிநீருக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
Home » Tamil Nadu Affairs » சென்னை மாநகரின் குடிநீர் தேவையும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கமும் - சில தகவல்கள்
சென்னை மாநகரின் குடிநீர் தேவையும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கமும் - சில தகவல்கள்
TNPSCLINK
1/23/2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment