இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது.
இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான எந்த செயல்பாடும் தென்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாத செயற்கைகோள் படத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து பதிலளித்த வெளிவிவகார அமைச்சகம் இந்தியா "அதன் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளது.
Home » International Affairs » அருணாச்சல பிரதேச எல்லையில் "101 வீடுகள் கொண்ட புதிய கிராமத்தை கட்டியுள்ள சீனா"
அருணாச்சல பிரதேச எல்லையில் "101 வீடுகள் கொண்ட புதிய கிராமத்தை கட்டியுள்ள சீனா"
TNPSCLINK
1/23/2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments
Post a Comment